பிரபல இசையமைப்பாளர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

78பார்த்தது
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே படப்பிடிப்பில் பங்கேற்கவந்த பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக மதுரை அழைத்து செல்லப்பட்டார்.
இசையமைப்பாளர், இயக்குநர் என திரைப்படத்துறையில் தனக்கென தனி இடம் பிடித்தவர் கங்கை அமரன். இவர் பிரபல சினிமா கம்பெனி எடுத்துவரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்சமயம் சிவகங்கை மற்றும் மானாமதுரை ஆகிய பகுதிகளை சுற்றி நடைபெற்றுவரும் நிலையில் அதில் பங்கேற்க அவர் மானாமதுரை வந்துள்ளார். அச்சமயம் திடிரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து முதலுதவி சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவரது தங்கும் விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி