உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள சட்டக்கல்லூரியில் பயின்று வரும் மாணவன் தபஸ். காசியாபாத்தை சேர்ந்த இவர் நேற்று (ஜன.11) இரவு நொய்டாவில் உள்ள தனது நண்பன் வீட்டில் நடைபெற்ற பார்ட்டிக்கு சென்றுள்ளார். அடுக்குமாடி குடியிருப்பின் 7வது மாடியில் இந்த பார்ட்டி நடைபெற்றது. பார்ட்டியின்போது மதுபானமும் குடித்துள்ளனர். அப்போது தபஸ் 7வது மாடியில் இருந்து விழுந்ததில் உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.