சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சந்தியாகு மகன் லூர்து. 80 ஆண்டுகள் பழமையான இவரது வீட்டை கடந்த 2018ம் ஆண்டு சில நபர்கள் இடித்து அகற்றி விட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த ஐந்து ஆண்டுகளாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மனு அளித்துள்ளார். இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை இல்லை என கூறும் முதியவர் மனம் தளராமல் மீண்டும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனு கொடுக்க வந்த போது முதியவர் ஆவேசமடைந்து புலம்பும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.