கட்டிட உரிமையாளர் மருத்துவமனை கண்ணாடியை உடைத்தால் பரபரப்பு

76பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வைகை ஆறு மற்றும் கீழப்பசலை கால்வாய் கரையை ஒட்டி டாக்டர் சுந்தரராஜன் என்பவர் தரை தளத்தில் மருத்துவமனை அமைக்க உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி பெற்றார். ஆனால் உரிய அனுமதி பெறாமல் மேலும் மூன்று தளத்தை விரிவுபடுத்தியுள்ளார். இந்நிலையில் முன்றாவது தளத்திற்கு அனுமதி வாங்காத நிலையில் இதுகுறித்து முத்துஜோதி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்ததையடுத்து பேரூராட்சி நிர்வாகம் கடந்தாண்டு டிசம்பர் 23ம் தேதிக்குள் மூன்றாவது தளத்தை இடித்து அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து சிவகங்கை மாவட்ட நகரமைப்பு குழு உதவி இயக்குனர் சுரேஷ், மானாமதுரை நகராட்சி ஆணையர் ஆறுமுகம் மற்றும் போலீசார் மூன்றாவது தளத்தை இடித்து அகற்ற மருத்துவமனைக்கு வந்தனர். ஏற்கனவே டாக்டர் சுந்தரராஜன் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையை தொடர்ந்து நடத்தி வரும் அவரது மகன் டாக்டர் ஆனந்திடம் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை எடுத்து கூறினர். இதனால் ஆத்திரமடைந்த டாக்டர் ஆனந்த் கட்டட முகப்பு கண்ணாடி கதவை அதிகாரிகள் முன்னிலையில் கைகளால் அடித்து உடைத்து சேதப்படுத்தினார். மருத்துவமனை நிர்வாகமே 3வது தளத்தை இடித்து அகற்ற வேண்டும் அல்லது மானாமதுரை நகராட்சி சார்பில் இடித்து அகற்றப்பட்டு அதற்கான செலவீனத்தை மருத்துவமனை நிர்வாகத்திடம் வசூலிக்க நேரிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி