சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இடைக்காட்டூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மின் கம்பம் முறிந்து தொங்கி வருவதாகவும்
தினமும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் இந்த ஆபத்தான மின் கம்பத்தை கடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் விரைவில் அந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும் எனவும் இணையத்தில் வீடியோ வைரலாக பரவி வருகிறது