மாயாண்டி சுவாமி தவசாலையில் சிறப்பு மகா யாகம்

54பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளகட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில் உள்ள மகா சித்தர் சூட்டுக் கோல் மாயாண்டி சுவாமிகள் தவசாலையில் ஆண்டு தோறும் விவசாய செழிக்க வேண்டியும் இயற்கை சீற்றங்கள் ஏதும் ஏற்படக்கூடாது என்று வைகுண்ட ஏகாதசி தினத்தில் இரவில் உலக அமைதிக்காக சிறப்புமகா யாகம் வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டும் மகா யாகம் நடைபெற்றது. இந்த மகாயாகத்தில் பத்தடி உயரத்திற்கு எழும்பிய தீ ஜுவாலைகளை பக்தர்கள் தரிசனம் செய்தனர்,
இந்த யாகத்தில் 21 மூலிகை செடிகள் , அனைத்து வகையான பழங்கள் , பூ , மாலைகள் போடப்பட்டு யாக சாலை. வைத்து பூஜிக்பட்ட புனித நீர் பகதர்கள் மீது தெளிக்கபட்டது. நிகழ்ச்சியில் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளுக்கு சிறப்பு பிஷேகம் ஆராதனை, செய்யப்பட்டது மகாயாகத்தில் கலந்து கொண்ட ஏராளமான பக்த்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி