சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்
மாவட்ட செயலாளர் உமர் தலைமையில் நடைபெற்றது.
மாநில பொதுச் செயலாளர் எஸ். எஸ். ஹாரூன் ரசீது, துணைப் பொதுச் செயலாளர் சைஃபுல்லாஹ், உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு
உரையாற்றினார்கள்.
மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இளையான்குடி உள்ளிட்ட சிவகங்கை மாவட்டம் முழுவதும் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வெறி நாய்களையும், போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக இருக்கும் கால் நடைகளையும் அகற்ற வேண்டும். அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களும், செவிலியர்களும் தூய்மை பணியாளர்களும் பற்றாக்குறைகளை நீக்கி பணி நியமனம் செய்ய வேண்டும். கடந்த மூன்று வருடங்களாக நிரப்பபடாமல் இருக்கும் மருத்துவர், காவலர் உள்ளிட்ட காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் இளையான்குடி பேரூராட்சியில் செயல் அலுவலரை உடனே நியமிக்க வேண்டும். 30 ஆண்டு கோரிக்கையான இம் மாவட்டத்தின் நதியான சுப்பன் கால்வாய்க்கு வரும் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி உடனடியாக தூர்வார வேண்டும்உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றினர்.