புதுக்கோட்டை
கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டையில் வேளாண்மை துறை பணிகளை கிராம நிர்வாக அலுவலர்கள் பணியில் திணிக்காதே உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் கருப்பு பேச்சி அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோஷங்கள் எழுப்பினார்கள்.