பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் பாலியல் புகாரில் கைதாகியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அவரது மனைவிக்கும் தெரியும் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரில், ஜானி மாஸ்டரின் நடனக் குழுவில் இணைந்ததில் இருந்து படப்பிடிப்புக்காக செல்லும் போதெல்லாம் தன்னை அவர் பாலியல் வன்புணர்வு செய்தார். மதம் மாறி திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.