குஜராத் மாநிலத்தில் 'அவசர சிகிச்சை பிரிவுக்குள் காலணி அணிந்து வர வேண்டாம்' என அறிவுறுத்திய மருத்துவரை நோயாளியின் உறவினர்கள் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உறவினரை காண வந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து, மருத்துவர் ஜெய்தீப் சின்ஹ கோகிலை தாக்கிய ஹிரேன் தங்கர், பவ்தீப் தங்கர் மற்றும் கவுசிக் குவடியா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.