உதயநிதி துணை முதலமைச்சராக பதவியேற்றால் அன்னைக்கு முகூர்த்த நாளாகத்தான் இருக்கும் என பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியளித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை, "உதயநிதி இன்று துணை முதல்வராக பதவியேற்க உள்ளார் என வதந்தி பரவியது. அதை நான் நம்பவில்லை. இன்று நல்ல நாள் இல்லை. நான் சேலஞ்ச் பண்ணி சொல்றேன் உதயநிதி துணை முதல்வராக பதவியேற்கும் நாள் முகூர்த்த நாளாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.