தமிழ்நாட்டு பெண்களிடம் 6,720 டன் தங்கம் இருப்பதாக உலக கோல்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளங்களில் ஒன்றாக தங்கம் கருதப்படுகிறது. இது இந்தியாவின் பாரம்பரியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய பெண்கள் சுமார் 24,000 டன் தங்கம் வைத்துள்ளனர். எந்த நாடும் வைத்திருக்கும் தங்கத்தை விட இது மிக அதிகம்" என கூறப்பட்டுள்ளது.