அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி உலக மக்கள் தொகை 809 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, 2024ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை எண்ணிக்கை 7.1 கோடி என்ற அளவில் அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் 7.5 கோடி மக்கள் தொகை அதிகரித்திருந்த நிலையில், இந்த ஆண்டு வளர்ச்சி விகிதம் அதை விட சிறிதளவு குறைந்துள்ளது.