டாஸ்மாக் மது விற்பனையில் டிஜிட்டல் முறையை கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அதில் QR CODE-ல் மது விற்பனை செய்வதும் ஒன்று. முதற்கட்டமாக ராணிப்பேட்டைக்கு உட்பட்ட லாலாப்பேட்டை, வன்னிவேடு உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் ஸ்கேன் செய்து விற்கப்பட்டது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் நாளை (ஜன. 01) முதல் இந்த முறை விரிவுப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.