ஜெகதா பட்டினம், கோட்டைப்பட்டினம், மணமேல்குடி, உள்ளிட்ட கடல் பகுதியில் இன்று முதல் ஜன. 3ஆம் தேதி வரை மணிக்கு 35 கிமீ முதல் 55 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் தென் தமிழக கடற்கரை, மன்னார் வளைகுடா மற்றும் கொமோரின் பகுதியில் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.