தாய்லாந்து: பாங்காக்கின் ஹொக் சான் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்த ஓட்டலின் 5வது மாடியில் உள்ள அறையில் நேற்று (டிச.30) இரவு 10 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.