ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நீ அவ்வளவு பெரிய ஆள் இல்லை. நான் மன்னிப்பு கேட்க நீ யார். தவறு செய்தது நீ. பத்திரிகையாளர்கள், போலீஸ் உயர் அதிகாரிகளை விட்டு கெஞ்சியது நீ. எதற்கு பேச வேண்டும் என எழுந்து சென்றவன் நான்.எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். உனக்கு பயந்து மன்னிப்பு கேட்க வேண்டுமா? நீ தான் கெஞ்சினாய். பிரச்னை வேண்டாம். அண்ணனுடன் தகராறு வேண்டாம் என கெஞ்சியது நீ என கூறியுள்ளார்.