பைக் மீது மின் ஒயர் அறுந்து விழுந்ததில் 3 பேர் பலி

70பார்த்தது
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர், எய்ம்ஸ் காவல் நிலையப் பகுதியான விசுன்பூர் குர்த் தோலா தன்ஹாவில் வசிக்கும் சிவராஜ் நிஷாத் (24), தனது 9 வயது மருமகள் மற்றும் 2 வயது மகளுடன் சோன்பர்சா மார்க்கெட்டில் இருந்து வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் மீது உயர் மின் அழுத்த ஒயர் அறுந்து விழுந்துள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரும் சிக்கி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். குரங்குகள் மின்கம்பியில் அமர்ந்து விளையாடியதால் விபத்து நிகழ்ந்ததாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி