தஞ்சாவூர் - Thanjavur City

மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு ரூ. 17. 75 கோடி தீர்வு

மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு ரூ. 17. 75 கோடி தீர்வு

தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீர்வு காண்பதற்காகத் தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நேற்று (செப்.14) நடைபெற்றது.   இந்நிகழ்வுக்கு மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான கே. பூரண ஜெய ஆனந்த் தலைமை வகித்தார். முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி ஆர். சத்ய தாரா, முதலாவது குற்றவியல் நீதித் துறை நடுவர் எஸ். சுசீலா, வழக்குரைஞர் கே. சுந்தரமூர்த்தி ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வில் குடும்ப நல வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இரண்டாவது அமர்வில் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மூன்றாவது அமர்வில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இவற்றுடன் மாவட்டத்தில் பல இடங்களில் விசாரணை நடத்தப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் 11 ஆயிரத்து 509 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 2 ஆயிரத்து 302 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ. 17 கோடியே 75 லட்சத்து 91 ஆயிரத்து 981 அளவுக்கு தீர்வு தொகையாக வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான சி. ஜெயஸ்ரீ, மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சார்பு நீதிபதியுமான எஸ். இந்திராகாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా