பாபநாசம் பெரியார் நகர் கருப்பண்ணசாமி கோவிலில் ஆடி திருவிழா

70பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பேரூர், பெரியார் நகரில் கருப்பண்ணசாமி, மதுரை வீரன், சந்தான காளியம்மன், உச்சி மகா காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில்  ஆண்டுதோறும் ஆடி மாதம் முளைப்பாரி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து பக்தர்கள் விரதம் இருந்து தங்கள் வீடுகளில் முளைப்பாரிகளை வளர்த்து வந்தனர். விழாவையொட்டி தங்கள் வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை மேலவீதி அருகில் உள்ள குடமுருட்டி ஆற்றங்கரையிலிரேந்து  ஊர்வலமாக மேளதாளங்கள் முழங்க எடுத்து வந்து கோவிலில் வைத்து கும்மியடித்து  நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரயிலடிதெரு பெரியார்நகர் கிராமவாசிகள், நாட்டாண்மை, கள்,
பஞ்சாயத்தார்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர்கள், மகளிர் சுய உதவிகுழுவினர்கள் செய்து இருந்தனர்.

தொடர்புடைய செய்தி