தஞ்சாவூர் கரந்தை கருணாசாமி திருக்கோயில் ஆடிப்பூரப் பெருவிழா,

62பார்த்தது
தஞ்சாவூர் கரந்தை அருள்மிகு கருணாசாமி திருக்கோயில் ஆடிப்பூரப் பெருவிழா, கொடியேற்றத்துடன் தொடக்கம், ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தஞ்சையை அடுத்த கரந்தை அருள்மிகு பெரியநாயகி அம்பாள் உடனுறை கருணாசாமி திருக்கோயில் என்கிற அருள்மிகு வசிஷ்டேஸ்வர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது, இக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற வைப்புத் தலமாகவும் விளங்கி வருகிறது, ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டதும், கரிகால் சோழ மன்னனுக்கு அருள்பாலித்து
ஸ்ரீ வசிஷ்ட மகா முனிவரால் பூஜிக்கப்பட்ட தலமாகவும் விளங்கி வருகிறது, இத்தகைய பிரசித்தி பெற்ற
இக்கோயிலில் ஆடிப்பூரம் விழா தொடங்கியது, இதையடுத்து பெரியநாயகி அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கொடிமரம் முன்பு எழுந்தருள கொடி மரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் செய்து கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது, பின்னர் மஹா தீபாராதனை காட்டப்பட்டது, தொடர்ந்து மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெற உள்ளது, இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

தொடர்புடைய செய்தி