மின் திட்டங்களை உருவாக்க வேண்டும் - சிபிஎம் பெ. சண்முகம்

76பார்த்தது
தஞ்சாவூரில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம் கூறியதாவது,
திமுகவின் தோழமைக் கட்சியாக இருந்து கொண்டு நீங்களே இப்படி செய்யலாமா என்று கேட்கக் கூடாது. மக்களின் தலையிலே கடுமையான சுமைகளை ஆட்சியாளர்கள் ஏற்றும் போது எதிர்ப்பதும், அதைக் கேள்வி கேட்பதும்  மக்களின் மீது அக்கறை உள்ள கட்சிகளின் கடமை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். திமுக தேர்தல் பரப்புரையின் போது ஆட்சிக்கு வந்தால் மின்கணக்கீட்டை மாதமாதம் எடுப்போம் என சொன்னார்கள். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டுக்கு தேவையான மின்சாரத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் இது போன்ற போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதில் ஆயிரக்கணக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மின்சாரத்தை மக்கள் வாங்கக்கூடிய வகையில், நியாயமான விலையில் வழங்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. கடைச் சரக்கு போல் மின்சாரத்தை லாபம் பார்க்கும் ஏற்பாடாக செய்ய முடியாது. அதனை மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழ்நாடு அரசாங்கம் இந்த மூன்று ஆண்டு காலத்தில் 34 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளார்கள். எனவே மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். மின் உற்பத்தி திட்டங்களை அரசு தொடங்கி மின்சாரத்தில் தன்னிறைவு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

தொடர்புடைய செய்தி