அ. தி. மு. க. வினர் மண்ணெண்ணெய் விளக்கு ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம்

64பார்த்தது
தமிழக அரசு தொடர்ந்து 3-வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளதை கண்டித்தும், ரேசன் கடையில் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சி நடப்பதாகவும் கூறி அ. தி. மு. க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கும்பகோணத்தில் அ. தி. மு. க. சார்பில் மண்ணெண்ணெய் விளக்கு ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் பாரதிமோகன் தலைமை தாங்கினார். கும்பகோணம் மாநகர செயலாளர் ராம ராமநாதன், ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், முத்துக்கிருஷ்ணன், கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அ. தி. மு. க. அமைப்பு செயலாளர் மனோகரன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

கும்பகோணம் ஒன்றியசெயலாளர் சோழபுரம் அறிவழகன் வரவேற்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அறிவொளி, பகுதி செயலாளர்கள் பத்ம குமரேசன், ராஜு, பேரூர் செயலாளர்கள் சிங். செல்வராஜ். வைரவேல். திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ராஜகுமாரன், கும்பகோண கிழக்கு ஒன்றிய இளைஞர் இளம் பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் சுடரொளி ராம்குமார், அதிமுக நிர்வாகிகள் தொழில் அதிபர் கேபிள் குமரன், வழக்கறிஞர் கர்ணன், ஆடுதுறை காமேஷ், பைசல் அஹமது மற்றும் அதிமுக மாவட்ட நகர ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். துணை மாவட்ட செயலாளர் தவமணி நன்றி கூறினார்.

-.

தொடர்புடைய செய்தி