நீலகிரி: கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நான்காவது நாளாக மதியம் நேரத்தில் கொட்டி தீர்த்த கனமழை பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மதியம் நேரத்தில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது வருகிறது இதன் காரணமாக உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. கோத்தகிரி, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மதிய நேரங்களில் அவ்வப்போது மூடுபனியுடன் சாரல் மழைப் பெய்து வந்தது இந்நிலையில் இன்று நான்காவது நாளாக மதியம் நேரத்தில் கனமழை பெய்தது வருகிறது குறிப்பாக கோத்தகிரி பேருந்து நிலையம், காமராஜ் சதுக்கம், கோடநாடு காட்சி முனை, கேத்தரின் நீர்வீழ்ச்சி, கட்டபெட்டு, ஆகிய பகுதியில் பரவலாக மழைப் பெய்தது. இதன் காரணமாக கடும் குளிரும் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க சிரமப்பட்டனர். கடும் குளிரும் நிலவுவதால் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.