முள்ளாம்பன்றியை தாக்கிய சிறுத்தை

80பார்த்தது
நீலகிரி மாவட்டம் முதுமலை மாவநல்லா வனப்பகுதியில் ரோட்டை கடக்கும் முயன்ற முள்ளம்பன்றியை சிறுத்தை ஒன்று தாக்க முற்பட்டபோது முள்ளம்பன்றி சிறுத்தையை முள்ளாள் தாக்கும் வீடியோ அப்பகுதியில் சென்ற சுற்றுலாப் பயணிகள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்தனர்.

மசினகுடி பகுதியில் பல்வேறு வன உயிரினங்கள் உயிர் வாழ்ந்து வருகின்றன குறிப்பாக இந்த வனப்பகுதி புலிகள் காப்பகமாக உள்ளது இங்கு அதிக அளவில் புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை, யானை ஆகியவை உயிர் வாழ்ந்து வருகின்றன.

இப்பகுதிக்கு தினந்தோறும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா வருவது வழக்கம். அவ்வாறு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களில் சுற்றிப் பார்க்க செல்வார்கள்.

அந்த வகையில் மசினகுடியிலிருந்து மாவநல்லா செல்லும் வழியில் முள்ளம்பன்றி கூட்டம் ஒன்று சாலையை கடக்கும் முயன்றது அப்போது வழியாக வந்து சிறுத்தை உண்டு முள்ளம்பன்றியை தாக்க முயன்றது. தன்னை பாதுகாத்துக் கொள்ள தன் உடம்பில் உள்ள முள்களை சிறுத்தை மீது அடித்து தன்னை காப்பாற்றிக் கொண்டது. இந்த காட்சியை வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்தனர்.


தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி