உலக சுற்றுலா தின பேரணியை துவக்கி வைத்தார் அமைச்சர்

84பார்த்தது
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைப்பயணத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார் சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன்.

நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையம் முன்பாக உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நீலகிரி ஹோட்டல் ரெஸ்டாரன்ட் அசோசியேஷன் (NHRA)சார்பில் விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது இதை சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேலும் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறை ரீதியாக சுற்றுலா தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது எனவும்

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு முதலில் மரியாதையாகவும் தூரமாகவும் கௌரவமாகவும் நடத்தப்பட வேண்டும் எனவும்

தமிழ்நாட்டில் 300 இடங்களை தேர்வு செய்து சுற்றுலா வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் முழு முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும்

தொடர்ந்து நீலகிரி மாவட்டத்திற்கு அதிகமான சுற்றுலா பணிகளை வருகை தர வைப்பதும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் அனைத்து விதமான வசதிகளையும் செய்து தர வேண்டும் எனவும்

மேலும் சுற்றுலாத்துறையில் 7% வருவாய் உள்ளதாகவும் அதை அதிகப்படுத்தும் நோக்கத்தோடு பணியாற்றி வருகிறோம் என்றும் அவர் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி