யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர்

61பார்த்தது
சேரங்கோடு அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள சத்துணவு கூட்டத்தை உடைத்து அரிசியை சாப்பிட்டு சென்ற புல்லட் ராஜா மற்றும் கட்டபொம்மன் ஆகிய யானைகள் , வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஆறு மாத காலமாக புல்லட் ராஜா மற்றும் கட்டபொம்மன் என்ற இரு ஆண் காட்டு யானைகள் தேயிலைத் தோட்டம் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருகிறது. இந்த இரண்டு யானைகளும் நீண்ட கால நண்பர்களாக ஒற்றுமையாக உலா வரும் நிலையில், இந்த இரு யானைகள் பகல் நேரங்களில் தேயிலைத் தோட்டம் மற்றும் வனப்பகுதியில் ஓய்வெடுப்பதும் இரவு நேரங்களில் நியாய விலைக் கடைகள் மற்றும் சத்துணவு கூட்டங்களை உடைத்து அரிசி சாப்பிடுவதை தொடர்ந்து செய்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் சேரங்கோடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள சத்துணவு கூடத்தை புல்லட் ராஜா மற்றும் கட்ட கொம்பன் ஆகிய இரு யானைகள் உடைத்து அங்கிருந்த அரிசிகளை சாப்பிட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த யானை விரட்டும் குழுவினர் இரு யானைகளையும் அருகாமையில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டினர். இதைத் தொடர்ந்து தற்போது கல்வித் துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி