நீலகிரியில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு

78பார்த்தது
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தொடர் மழை காரணமாக மரப்பாலம் அருகே மரம் விழுந்து மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கனமழை மற்றும் சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை நீலகிரி மாவட்டத்திற்கு காணப்படும் நிலையில் மேட்டுப்பாளையம் குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் எட்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே மரம் சாய்ந்து மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குன்னூர் டிஎஸ்பி வீரபாண்டி மற்றும் குன்னூர் இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சாலையில் விழுந்த மரம் மற்றும் மண் சரிவுகளை சரி செய்த பின்பு போக்குவரத்து மீண்டும் துவங்கியது மழைக்காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் பயணிக்க காவல்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி