மருத்துவமனை கூடலூர் நகர் பகுதியில் பொதுமக்கள் பேருந்துக்காக நின்று இறக்கி விடப்படும் இடத்தில் வீடு இடிந்து விழுந்ததால் அங்கு நாள்தோறும் பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள் இடர்பாடுகளில் சிக்காமல் தப்பித்தனர் உதகை மைசூர் செல்லும் சாலையில் உள்ள மேல் கூடலூர் பகுதியில் சாலை ஓரங்களில் பழமையான கட்டிடங்கள் ஏராளமானவை உள்ளன இந்த நிலையில் இன்று காலை ஓரத்தில் இருந்த இருமாடிகள் கொண்ட பழமையான வீடு ஒன்று திடீரென இந்து விழுந்தது இதனால் அங்கு இருந்த பொதுமக்கள் அச்சமடைந்து ஓட்டம் பிடித்தனர் இதனால் சிறிது நேரம் உதகை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது பின்பு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன ஒரு புறம் கட்டிடம் இடிந்து விழுந்ததால் மீண்டும் இடிந்து விடுமோ என்ற அச்சத்தோடு அங்கிருந்து பொதுமக்கள் தூரமாக விலகிச் சென்றனர் பின்பு சாலையில் விழுந்த கட்டிட இடர்பாடுகள் அகற்றப்பட்டன அதன் பின்பு பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர் கடந்த சில நாட்களாக கூடலூரில் பெய்து வரும் மழையின் காரணமாக இந்த சாலை ஓரம் இருக்கும் பழமையான கட்டிடங்கள் மழைநீரில் ஈரமாகி ஈரப்பதத்தோடு காணப்படுவதால் இன்று பாரம் தாங்காமல் இரண்டடுக்கு மாடி கொண்ட ஓட்டு வீடு இடிந்து விழுந்துள்ளது எனவே பொதுமக்கள் சாலை ஓரங்களில் நடந்து செல்லும் போதும் வீடுகளின் அருகில் நிற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது