தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பலேனோ ரீகல் பதிப்பை மாருதி அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், ஆட்டோமேட்டிக் மற்றும் சிஎன்ஜி உட்பட நியூ ஏஜ் பலேனோ அனைத்து வகைகளிலும் கிடைக்கிறது. இது ரூ.8.93க்கு விற்பனையாக உள்ளது. காரின் கிரில் மேல் அலங்காரம், முன்புற அண்டர்பாடி ஸ்பாய்லர், ஃபாக் லேம்ப் அலங்காரம் மற்றும் பின்புற அண்டர்பாடி ஸ்பாய்லர் ஆகியவை காரை மேலும் அழகாக்குகின்றன. கூடுதலாக, பாடி சைட் மோல்டிங், கதவு விசர்கள் ஆகியவை காருக்கு புதிய தோற்றத்தை வழங்குகிறது.