உதகையில் உர விற்பனை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
நீலகிரி மாவட்டத்தில் விவசாய நிலங்களின் மண் மற்றும் நீரோட்டத்தை பாதுகாக்கவும், மகசூல் அதிகரிக்கம் இயற்கை உரம் பயன்படுத்துவதே சரியான தீர்வு உர விற்பனை முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மலை மாவட்டமான நீலகிரியில் விளையும் மலை காய்கறிகளுக்கு சந்தைகளில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக கேரட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறிகள் பிற மாநிலங்கள் மட்டுமன்றி வெளிநாடுகள் வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் நீலகிரி மலை காய்கறிகளுக்கென தனி வரவேற்பு உள்ளது. இவ்வாறு உற்பத்தியாகும் மலை காய்கறிகளுக்கு தற்போது அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனை தடுக்க இயற்கை விவசாயத்தை நீலகிரி மாவட்ட நிர்வாகம் ஊக்குவித்து வருகிறது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதனால் விவசாயிகள் ஏராளமானோர் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.