உதகை அருகே உள்ள கோக்கால் கிராமத்தில் மேல்நிலைப் பள்ளியின் கட்டிடம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்து இடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை அப்பணிகளை மேற்கொள்ளாததால் காலாண்டு தேர்வு முடிந்து பள்ளி துவங்கும் நாள் முதல் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை என பெற்றோர்கள் அறிவிப்பு.
பேட்டி. (கபாலன்) ஊர் பொதுமக்கள்
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட கோக்கால் கிராமத்தில் கோத்தர் பழங்குடியின மக்கள் மற்றும் ஆதிதிராவிடர் மக்கள் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இக்கிராமத்தில் உள்ள 350 மாணவ, மாணவிகள் அரசு துவக்கப்பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளியில் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் 6-ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மேல்நிலை பள்ளி கட்டிடம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்து மழை நீர் கட்டிடங்களுக்குள் புகுந்ததால் மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளி கல்வித்துறை அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இது குறித்து புகார் அளித்ததின் பேரில் கடந்த 2021 ஆம் ஆண்டு பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கட்டிடம் முழுவதுமாக இடிக்கப்பட்டது.