கூடலூர் - Gudalur

ஊட்டி: தரிசனத்திற்கு வைத்த இயேசு கிறிஸ்துவின் புனித ஆடை

ஊட்டி: தரிசனத்திற்கு வைத்த இயேசு கிறிஸ்துவின் புனித ஆடை

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறந்த பிறகு, அவரது உடலில் போர்த்தப்பட்ட புனித ஆடையின் நகல் ஊட்டியில் உள்ள புகழ்பெற்ற தூய சூசையப்பர் ஆலயத்தில் பொது மக்கள் தரிசனத்திற்காக நேற்று (மார்ச் 25) வைக்கப்பட்டது.  இயேசு கிறிஸ்துவின் புனித ஆடையின் நகல் ஊட்டிக்கு கொண்டு வரப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த புனித ஆடை 14 அடி நீளம் கொண்டது. இயேசு கிறிஸ்து இறந்த பிறகு அவரது உடலில் போர்த்தப்பட்ட புனித ஆடை இது என்று நம்பப்படுகிறது.  இயேசு கிறிஸ்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த பின்பு அந்த வெண்ணிற ஆடை மட்டும் கல்லறையில் இருந்தது என்று விவிலியத்தில் சொல்லப்படுகிறது. இந்த புனித ஆடையின் அசல் இத்தாலி நாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள புனித ஆடையின் உண்மைத் தன்மையை உறுதி செய்வதற்காக, ஆறு நகல்கள் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.  அதன் ஒரு நகல் தற்போது ஊட்டியில் உள்ள தூய சூசையப்பர் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த புனித ஆடையை தரிசனம் செய்வதற்காக ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கிறிஸ்தவர்கள் திரளாக தூய சூசையப்பர் ஆலயத்திற்கு வந்தனர். அங்கு அவர்கள் புனித ஆடையை தொட்டு வணங்கி பிரார்த்தனை செய்தனர். இந்த நிகழ்வு ஊட்டி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

வீடியோஸ்


நீலகிரி