மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் இன்று சமர் பில்லர் (13) என்ற சிறுவன் உள்ளூர் திருவிழா ஒன்றில் டிஜே பாடல்களுக்கு நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது, சிறுவன் தவறி கீழே விழுந்தான். இதனைப் பார்த்த சிறுவனது தாயார், கதறி துடித்தார். உடனே, சிறுவனை மீட்ட அப்பகுதி மக்கள், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுவன் இறந்ததையடுத்து குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறினர்.