நீலகிரியில் மதுபானக்கடையை திறப்பதற்கு எதிர்ப்பு

77பார்த்தது
நீலகிரி மாவட்டம் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த மனுவில் நீலகிரி மாவட்டத்தில் சோலூர் கிராமத்தில் மதுபானக்கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதில் சூலூர் கிராமத்தில் ஏற்கனவே மதுபானக்கடை திறக்கப்பட்டது. மது அருந்துவதால் பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டனர். மேலும் பல அசம்பாவிதங்களும் நடைபெற்று வந்தது என்பதால் ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து பல போராட்டங்களை நடத்தி அதன் வாயிலாக அன்றைய மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில், ஆட்சித்தலைவர் சோழர் கிராமத்தில் ஆய்வு செய்து மதுபானக்கடை மூடப்பட்டது.

ஆனால், தற்போது சோலூர் கிராமத்தில் மதுபானக்கடை திறக்கப் போவதாகவும், மூடப்பட்ட மதுபானக்கடையை திறப்பதற்கு மக்களிடையே பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது எனவும், மாவட்ட ஆட்சியர் அவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் சோலூர் கிராமத்தில் மீண்டும் மதுபானக்கடையை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் எனவும் ஊர் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி