நீலகிரியில் மக்கள் பீதி கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

67பார்த்தது
*கோத்தகிரி அருகே உள்ள கன்னிகாதேவி காலனி கிராமத்துக்குள் புகுந்த நான்கு கரடியை நாய் குறைத்து துரத்தியது நாயை பார்த்து வரிசையாக சென்ற கரடிகள்.

கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது.
உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து விடுகின்றன.

இந்நிலையில் கோத்தகிரி அருகே உள்ள கன்னிகா தேவி காலனி கிராமத்தில் நான்கு கரடி உலா வந்த கரடிகள் நீண்ட நேரமாக கிராமப் பகுதிக்குள் சுற்றித்திரிந்து அதன்பின் கிராம பகுதியில் உள்ள வளர்ப்பு நாய் கரடியை பார்த்து குறைத்து துரத்தியது நாயை பார்த்த கரடிகள் ஒத்தையடி பாதையில் ஒன்றின் பின் ஒன்றாக வரிசையாக சென்றது இதை கண்ட கிராம மக்கள்
சற்று தொலைவிலேயே அக்கிராம மக்கள் பாதுகாப்பாக நின்று கொண்டு தங்களது செல்போனில் கரடிகளை வீடியோ எடுத்து உள்ளனர்.

மேலும் இந்த கரடிகள் அக்கிராம மக்களை யாரையாவது தாக்கும் முன் வனத்துறையினர் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டுமென்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி