துவக்கப்பள்ளியில் மழைநீர் மானவர்கள் திரும்பி சென்றனர்

84பார்த்தது
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று இரவு  பெய்த கன மழையால்   பரலியார் துவக்கப்பள்ளியில் மழைநீர் மற்றும் மண் பள்ளியின் உள்ளே புகுந்தது இதனால் பள்ளி அரை முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது.

இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் பள்ளியில் வெள்ளம் புகுந்துள்ளதை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் தேசிய நெடுஞ்சாலையில் சாலைப் பணிகள் நடைபெறும் இடத்தில் மண் கொட்டப்பட்டுள்ளதால் நேற்று பெய்த கன மழையில் மண் அரிப்பு ஏற்பட்டு அந்த வெள்ளமானது துவக்க பள்ளிக்குள் புகுந்துள்ளது எனவே உடனடியாக துவக்கப்பள்ளியை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி