நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இரவு நேரத்தில் நான்கு பெரிய கரடிகள் கோயிலில் விளையாடிக் கொண்டிருந்த செல்போன் காட்சி பதிவு.
சர்வசாதாரணமாக குடியிருப்பு பகுதியில் உலா வரும் நான்கு பெரிய கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
குறிப்பாக குடியிருப்பு பகுதிகள், தேயிலை தோட்ட பகுதிகளில் உலா வரத் தொடங்குவதோடு மட்டும் அல்லாமல் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் வீடுகளை உடைத்து சேதப்படுத்துவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு நேரத்தில் கோத்தகிரி , கேம்ப் லைன் உள்ள முனீஸ்வரர் கோயிலில் பகுதியில் இரவு நேரத்தில் நான்கு பெரிய கரடிகள் விளையாடிக் கொண்டிருந்தது.
இந்த காட்சி குடியிருப்பு வாசிகள் செல்போனில் வீடியோ பதிவு செய்த நிலையில் குடியிருப்பு வாசிகளை பெரிதும் அச்சமடைய செய்துள்ளது.
எனவே குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடிகளை உடனே கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.