நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மிளிதேன் பகுதியில் தொடர்ந்து ஒரே வீட்டிற்குள் நுழைந்த கருஞ்சிறுத்தை CCTV காட்சிகள் வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை கரடிகள் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்துள்ளது உணவு தேடி குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் சிறுத்தைகள் வீட்டில் வளர்க்கும் நாய் பூனை வாத்து உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வேட்டையாடி செல்கின்றன
இந்த நிலையில் கடந்த வாரம் கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன் பகுதியில் இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த கருஞ்சிறுத்தை பூனையை கவ்வி சென்றது அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்பட்டுள்ளது இதே போல் வீட்டிற்குள் புகுந்த கருஞ்சிறுத்தை சங்கிலியால் கட்டப்பட்டிருந்த நாயை வேட்டையாட முயன்று தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது
தொடர்ந்து நேற்று இரவு இதே பகுதியில் கருஞ்சிறுத்தை தொடர்ந்து உலா வருவது அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர்
எனவே கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் காணப்படுவதால் வனத்துறையினர் சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தை, கரடி நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.