மதுரையில் குஷ்பு கைது.. விமான பயணம் ரத்து

72பார்த்தது
மதுரையில் குஷ்பு கைது.. விமான பயணம் ரத்து
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து மதுரையில் தடையை மீறி பேரணியில் ஈடுபட்ட குஷ்பு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், விமானம் மூலம் பிற்பகல் 3.30 மணிக்கு மதுரையில் இருந்து சென்னை திரும்ப இருந்த குஷ்புவின் பயணம் ரத்தானதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான பயணம் செய்வதற்காக அனுமதி கோரியிருந்த நிலையில், மாலை 5 மணி வரை குஷ்புவை விடுவிக்க முடியாது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி