தமிழக பாஜக தலைவர் பதவிக்காக தமிழிசை சௌந்தரராஜன் டெல்லி சென்று வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலையின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வருவுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பதவியை கைப்பற்ற பலரும் திட்டம் தீட்டு வருவதாக தெரிகிறது. அந்த வகையில், தமிழிசை சௌந்தரராஜன், தனக்கு நெருக்கமான டெல்லி லாபியை கொண்டு அண்ணாமலைக்கு எதிராக டெல்லி தலைமையிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.