TTF வாசன் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மலைப்பாம்பை கையில் வைத்து கொண்டு வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சென்னை வனத்துறையினர் இது குறித்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், TTF வாசனின் சொந்த ஊரான கோவை வெள்ளியங்காட்டில் நேற்று (ஜன.02) காரமடை வனத்துறையினர் நேரில் சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.