கோவை - சிங்கப்பூர் நேரடி விமான சேவை விரிவாக்கம்

71பார்த்தது
கோவை - சிங்கப்பூர் நேரடி விமான சேவை விரிவாக்கம்
இண்டிகோ விமான நிறுவனம், கோவை - சிங்கப்பூர் இடையேயான நேரடி விமான சேவையை விரிவுபடுத்தும் முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது, ஏற்கனவே வாரத்திற்கு இரண்டு நாட்கள் இயக்கப்பட்டு வந்த இந்த சேவை, மார்ச் மாத இறுதியிலிருந்து வாரத்திற்கு மூன்று நாட்களாக அதிகரிக்கப்பட உள்ளது. திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயங்கி வந்த இந்த விமான சேவை, இனிவரும் காலங்களில் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயங்கும். இதனால், சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் விமானம் வரும். 

இந்த புதிய விமான சேவை, வருகின்ற கோடை விடுமுறையை முன்னிட்டு துவங்கப்படுவதால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சிங்கப்பூருடனான வணிக உறவுகள் வலுவடைந்து, காய்கறி ஏற்றுமதி அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இந்த புதிய விமான சேவை, கோவை மற்றும் சிங்கப்பூர் இடையேயான இணைப்பை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி