குனியமுத்துார், ஒத்தக்கால் மண்டபம் பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட பிரீமியர் நகர், மாம்பள்ளி, சீரபாளையம் பகுதிகளில், தவிர்க்க இயலாத நிர்வாக காரணங்களால், இம்மாதத்துக்கான மின் கணக்கீடு மேற்கொள்ளப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படும் நுகர்வோருக்கு நிவாரணமாக, இப்பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர், அக்டோபர் மின் கட்டணத்தையே டிசம்பர் மாதத்துக்கும் செலுத்தலாம் என, குனியமுத்துார் செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு, குனியமுத்துார் செயற்பொறியாளரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.