கோயம்புத்தூர் - Coimbatore

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு: முதலமைச்சர் அனுமதி அளிக்க வேண்டும்

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு: முதலமைச்சர் அனுமதி அளிக்க வேண்டும்

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேற்று (செப். 21) செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 1925ம் ஆண்டு விஜயதசமி அன்று ராஷ்ட்ரீய ஸ்வயம்சேகவ சங்கம் தொடங்கப்பட்டது. அதனால் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சீருடை அணிந்த ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் அணிவகுப்பும் பொதுக்கூட்டமும் நடப்பது வழக்கம். தமிழகத்தில் 1940களில் இருந்த ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடந்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு, பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த திமுக அரசின் காவல்துறை அனுமதிக்கவில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பிறகே, சர்வாதிகார ஆட்சியைப் போல பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. ஏற்கனவே உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலங்கள் நடந்திருக்கும் நிலையில், இந்த ஆண்டு அக் 6-ம் தேதி தமிழகத்தில் 58 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு, பொதுக்கூட்டம் நடத்த அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாநகர காவல் ஆணையர்களிடம் அனுமதி கேட்டு ஆர்எஸ்எஸ் விண்ணப்பித்துள்ளது. நாட்டை வழிநடத்தியவர்களும், இப்போதுவழிநடத்துபவர்களும் ஆர்எஸ்எஸ் அமைப்பால் வளர்ந்தவர்கள். முதலமைச்சர் இதில் தலையிட்டு அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.

வீடியோஸ்