கோவை: 21 கிலோ கஞ்சா பறிமுதல்

67பார்த்தது
கோவை: 21 கிலோ கஞ்சா பறிமுதல்
புத்தாண்டு கொண்டாட்டத்தை பயன்படுத்தி இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய திட்டமிட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

சரவணம்பட்டி போலீசார் நேற்று முன்தினம் (டிசம்பர் 31), சின்னவேடம்பட்டி குளம் பகுதியில் ரோந்து சென்ற போது, சந்தேகத்திற்கிடமான நபர்கள் தப்பி ஓட முயன்றனர். இதில் மாரி மனோஜ் குமார் (22) என்பவரை பிடித்து விசாரித்த போது, அவரிடம் இருந்து 21.200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், மனோஜ் குமார் தனது நண்பர்களான கவுதம், அஷ்வின், பாபு, ரவீந்திரன், மோகன், சிவா, ராகேஷ் ஆகியோருடன் இணைந்து புத்தாண்டு கொண்டாட்டத்தை பயன்படுத்தி இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. 

மேலும், வெளி மாவட்டத்தில் இருந்து 21 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து கோவையில் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்தார். போலீசார் மனோஜ் குமாரை கைது செய்து, மற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் கஞ்சா விற்பனை தடுப்பு நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி