கோவை: பட்டாவை தரையில் வீசி திடீர் போராட்டம்!

72பார்த்தது
கோவை மாவட்டம், பொள்ளாச்சி புள்ளக்காபாளையத்தில் அரசு வழங்கிய நிலத்தில் வசிக்கும் நரிகுறவ மக்கள், தங்களின் உறவினர் ஜஸ்டின் சுந்தரின் தொல்லை காரணமாக கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இன்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தங்கள் நிலப் பட்டாக்களை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ஜஸ்டின் சுந்தர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தங்களது குழந்தைகளைத் தாக்குவதாகவும், இதனால் தங்கள் குடியிருப்புகளில் அமைதியாக வாழ முடியாமல் தவிப்பதாகவும் குற்றம் சாட்டினர். இதுகுறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தங்களது நிலப் பட்டாக்களை திரும்பப் பெற்று மாற்று இடம் அல்லது ஜஸ்டின் சுந்தரை அந்த பகுதியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி