பழனியில் இருந்து வாங்கி வரப்பட்ட பஞ்சாமிர்தத்தில் கரும்பு சக்கை கிடந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிதம்பரத்தை சேர்ந்த முருக பக்தர் மாரியப்பன், இது தொடர்பான வீடியோ ஒன்றையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். பழனிக்கு சென்ற அவர் வாங்கிய பஞ்சாமிர்த பிரசாதத்தில் கரும்பு சக்கை கிடந்ததால் மனம் மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும், தரமான பஞ்சாமிர்தம் வழங்குவதை கோவில் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.