
திருச்செங்கோடு: கோயில் குடமுழுக்கு விழா - அமைச்சர் பங்கேற்பு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த மாமுண்டி கிராமம் கரட்டுபாளையம் அருள்மிகு பிரணவ கணபதி, வள்ளியம்மாள், பொம்மியம்மாள், மதுரைவீரன் மற்றும் முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.