தமிழ் சினிமாவில் காமெடி நடிகரான கூல் சுரேஷ், கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பல்வேறு தமிழ் சினிமா பிரபலங்கள் பங்கேற்று, கூல் சுரேஷுக்கு வாழ்த்துகள் கூறினர். அந்த வகையில், யூடியூபர் ஒருவர் கலந்துகொண்டு கூல் சுரேஷை வாழ்த்தினார். தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கூல் சுரேஷ் அண்ணனுக்கு ஏராளமான ரசிகர்கள் குவியவுள்ளனர். ஆகையால், மத்திய அரசு கூல் சுரேஷுக்கு, 'Z' பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என கலாய்த்தார்.